வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

களக்காடு அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கீழுர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). இவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் பிரேமா வழங்கினார்.


Next Story