வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
ஸ்ரீரங்கம் கீழஆண்டாள் வீதியில் கடந்த மாதம் 16-ந்தேதி ஒருவாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,300 பறித்த வழக்கில் அய்யப்பன் (வயது 29) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் அவர் மீது திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட், ஸ்ரீரங்கம், கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 2 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்போன் கடையை உடைத்து செல்போன் திருடிய 2 வழக்குகளும், கத்தியை காட்டி பணம் பறித்ததாக 2 வழக்குகளும் என 9 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர் ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story