வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளையைச் சேர்ந்தவர் பேச்சிராஜா. இவர் கடந்த 6-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தென்கலம்புதூர் காந்திநகரை சேர்ந்த ராம மூர்த்தி (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை கோவை சிறை அதிகாரிகளிடம், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் நேற்று வழங்கினார்.
Related Tags :
Next Story