வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வள்ளியூர் பகுதியில் புகையிலை விற்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வள்ளியூர் பகுதியில் 82 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக தனியார் டிராவல்ஸ் மூலம் கொண்டு வந்த தோவாளை அழகியபாண்டிபுரத்தை சேர்ந்த அரிஹரசுதன் (வயது 27) என்பவரை வள்ளியூர் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று அரிஹரசுதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.
Related Tags :
Next Story