போதை ஊசி, மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போதை ஊசி, மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் பகுதியில் போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளை விற்றதாக பிரபல ரவுடி மதன் (வயது 39) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள், 2 போதை ஊசி மருந்துபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மதன் மீது சுமார் 25 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்க குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்தார். அதை பரிசீலனை செய்த மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.காா்த்திகேயன், சிறையில் உள்ள மதனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள மதனிடம் அதற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது.