குமரியில் இடி-மின்னலுடன் மழை


குமரியில் இடி-மின்னலுடன் மழை
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் இடி-மின்னலுடன் மழை

கன்னியாகுமரி

திருவட்டார்,

குமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அத்துடன் மாவட்டத்தில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. அதன்படி நேற்று மாலை 4 மணி முதல் திருவட்டார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 2 மணி நேரம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருவட்டார் மட்டுமல்லாமல் குலசேகரம், ஆற்றூர், சிதறால், மாத்தார், செறுகோல், வீயன்னூர், மாத்தூர், சித்திரங்கோடு, வேர்க்கிளம்பி, திருவரம்பு, இட்டகவேலி, தச்சூர், புத்தன்கடை, புலியிறங்கி, திற்பரப்பு, பூவன்கோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story