தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் உருவான நாளான, நாளை (வியாழக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாவட்டம் உதயமான நாள்

தூத்துக்குடி மாவட்டம் 20.10.1986 அன்று நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது. இதனை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுஅலுவலகங்களிலும் சுத்தம் சுகாதாரம் என்பதற்கேற்ப சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும். அலுவலக வாளங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்.

சிறப்பு முகாம்

அனைத்து அரசு அலுவலகங்களையும் அழகுபடுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுக்களிடம் இருந்து மனுக்கள் பெற வேண்டும். பொதுமக்கள் இந்த முகாமில் தங்கள் குறைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாரகள. அன்றைய தினம் பெறப்படும் மனுக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் உருவான நாளில், மாவட்டத்தில் உ்ளள அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் அலுவலகத்தை சுத்தமாக வைத்து மரக்கன்று நடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story