ஏலச்சீட்டு மோசடி; பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு


ஏலச்சீட்டு மோசடி; பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
x

ஏலச்சீட்டு மோசடி; பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள வி.டி.மணிகண்டன் நகரை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 35). இவருக்கு ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் கூறியதின் பெயரில் நகரில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் காளீஸ்வரி ரூ.3 லட்சம் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டினார். 3 மாதங்கள் தவணை கட்டிய நிலையில் விருப்பமில்லாததால் பணம் கட்டுவதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் சீட்டு நிறுவனத்தில் இருந்து காளீஸ்வரியை தொடர்பு கொண்டு ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் ஏலச்சீட்டு எடுத்துள்ளதாகவும் அதற்கு பணம் கட்டாமல் உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரி சீட்டு நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது மேற்படி சீட்டு தொகை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தனியார் வங்கி மூலம் பணம் செலுத்தி வந்த நிலையில் திடீரென பணம் செலுத்தாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே ஏலச் சீட்டில் சேர்வதற்கு காளீஸ்வரி கொடுத்திருந்த ஆதார அட்டை, ரேஷன் கார்டு மற்றும் ஜாமீன்தாரர் கையெழுத்து ஆகியவற்றை பயன்படுத்தி புவனேஸ்வரி, அழகர்சாமி, முருகானந்தம் மற்றும் மணிமாறன் ஆகிய 4 பேரும் ஏலச்சீட்டு தொகை எடுத்துள்ளதாகவும், தனியார் வங்கியில் போலி கையெழுத்திட்டு கணக்கு தொடங்கியதும் தெரியவந்தது. இதுபற்றி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் புவனேஸ்வரி உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story