சேலம் ரெயில்வே கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் அபராதம் வசூலித்த டிக்கெட் பரிசோதகர்கள் கோட்ட மேலாளர் பாராட்டு


சேலம் ரெயில்வே கோட்டத்தில்  ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் அபராதம்  வசூலித்த டிக்கெட் பரிசோதகர்கள்  கோட்ட மேலாளர் பாராட்டு
x

சேலம் ரெயில்வே கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் அபராதம் வசூலித்த டிக்கெட் பரிசோதகர்களுக்கு கோட்ட மேலாளர் பாராட்டினார்.

சேலம்

சூரமங்கலம்,

டிக்கெட்

சேலம் ெரயில்வே கோட்டத்தில் கடந்த (2022) ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ெரயில்களில் டிக்கெட் எடுக்காமல், லக்கேஜ் கட்டணம் செலுத்தாமல், முன்பதிவு இல்லா டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.9 கோடியே 70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த அபராதமானது கடந்த ஆண்டை விட 96.75 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 69 லட்சம் டிக்கெட் பரிசோதனை செய்ததன் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த தொகையானது சேலம் ெரயில்வே கோட்ட வரலாற்றில் ஒரே மாதத்தில் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

கோட்ட மேலாளர் பாராட்டு

சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் தொடர்ச்சியாக அடிக்கடி சோதனை நடத்தப்பட்டதால் இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டது. தனிநபர் டிக்கெட் பரிசோதனை செய்ததில் டிக்கெட் பரிசோதகர் சீனிவாசன் 10 லட்சத்து 80 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார். இதேபோல் டிக்கெட் பரிசோதகர் சந்திரசேகர் ரூ 10 லட்சத்து 20 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்.

ஒரு மாதத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூல் செய்து புதிய சாதனை படைத்த டிக்கெட் பரிசோதகர்கள் இருவரையும் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


Next Story