கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்


கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்
x

கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூர்

தளி

வனப்பகுதியில் அமைந்துள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கட்டளை மாரியம்மன் கோவில்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப் பகுதியில் சின்னாற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி உள்ள இந்த கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை நடைபெற்று வருகிறது. கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் காலம் காலமாக பூஜை செய்து வருகின்றனர்.

கோவில் அமைந்துள்ள பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அதைத் தொடர்ந்து சின்னார் சோதனை சாவடியில் இருந்து கோடந்தூர் சுற்றுச்சூழல் குழுவைச் சேர்ந்த வாகனங்கள் மூலமாக பொதுமக்கள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதற்காக அவர்களிடம் ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் தற்போது திடீரென உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கட்டணம்

வனப்பகுதியில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த கட்டளை மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தவறாமல் வந்து கொண்டு உள்ளோம். வனப்பகுதியில் செல்வதற்கு வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும் தடை உள்ளதால் சின்னார் சோதனை சாவடியுடன் வாகனங்களை நிறுத்தி விடுகின்றோம். அங்கிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வேன்களில் அழைத்துச் செல்லாமல் சரக்கு வாகனத்தில் ஆடு, மாடுகளை போன்று ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இதற்கான கட்டணத்தையும் தற்போது திடீரென உயர்த்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பொதுமக்களை பாதுகாப்பாக வேன்களில் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்வதுடன் பொதுமக்களை பாதுகாப்பாக வேன்களில் அழைத்துச் செல்வதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

----------------


Next Story