உலக புலிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக புலிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உடுமலை,
உடுமலையில், உலக புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உலக புலிகள் தினம்
தமிழ் நாடு வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில் நேற்று புலிகளை காப்போம், புவியை காப்போம் என்ற தலைப்பில் உலகபுலிகள் தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து புறப்பட்டது. ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சிக்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனரும், திருப்பூர் மாவட்ட வன அலுவலருமான எஸ்.என்.தேஜஸ்வி தலைமை தாங்கினார். ஊர்வலத்தை உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான, உடுமலை சப்-கோர்ட் நீதிபதி எம்.மணிகண்டன் தொடங்கி வைத்தார். ஆனைமலை புலிகள் காப்பகஉதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனரான க.கணேஷ்ராம் வரவேற்றார்.
உடுமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் கே.விஜயக்குமார், ஆர்.மீனாட்சி, ஆனைமலை புலிகள் காப்பக கவுரவ வன உயிரின காப்பாளர் ஆர்.நந்தினிரவீந்திரன், டபிள்யு. டபிள்யு.எப்.தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்.ஜி.எம்.பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கார்த்திகேயன், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் பி.சத்யம்பாபு, முன்னாள் தலைவர்கள் எஸ்.சக்கரபாணி, என்.ஆர்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தின் முன்னால் ஜீப் மீது புலி உட்கார்ந்திருப்பது போன்ற கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது.
மாணவ-மாணவிகள்
ஊர்வலத்தில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், ஆர்.ஜி.எம்.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிமாணவ, மாணவிகள், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனைமலை புலிகள் காப்பகம் குறித்த காணொளியும் ஒளிபரப்பப்பட உள்ளது.