புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x

மசினகுடியில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

நீலகிரி

கூடலூர்

மசினகுடியில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

உலக புலிகள் தினம் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் மசினகுடியில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை இயக்குனர் அருண் முன்னிலை வைத்தார்.

பேரணி மசினகுடி பஜார் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று வனத்துறை சோதனைச்சாவடியை அடைந்தது. பேரணியில் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், வனத்துறையினர் திரளாக கலந்து கொண்டு புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து புலிகள் பயன் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் பள்ளிக்கூடம் மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

உறுதி ஏற்க வேண்டும்

தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உயிர் சூழல் மண்டலத்தில் புலிகளின் பங்களிப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது. வனத் தை பாதுகாக்க இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வனம் இருந்தால் மட்டுமே அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான தூய்மையான காற்று, குடிநீர் கிடைக்கும். எனவே புலி உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வன சரகர்கள், பள்ளிக்கூடம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story