தமிழக-கர்நாடக எல்லையில் குட்டியுடன் உலா வரும் புலி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள் தவறானது வனத்துறை அதிகாரி தகவல்


தமிழக-கர்நாடக எல்லையில் குட்டியுடன் உலா வரும் புலி:  சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள் தவறானது  வனத்துறை அதிகாரி தகவல்
x
ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி வனச்சரகத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் சேஷன் நகர் என்ற இடம் உள்ளது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒரு புலி சேஷன் நகரில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடி வருகிறது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தார்கள்.அதைத்தொடர்ந்து தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு-கர்நாடக வனத்துறையினர் 2 ட்ரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள். 15-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் சேஷன்நகர் பகுதியில் குட்டியுடன் ஒரு புலி உலா வரும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுபற்றி தாளவாடி வனச்சரகர் சதீஷ் கூறும்போது, 'இந்த வீடியோ பதிவு தாளவாடி பகுதியில் எடுக்கப்பட்ட காட்சி இல்லை. சேஷன்நகர் பகுதியில் ஒற்றை புலியின் நடமாட்டம் மட்டுமே உள்ளது. வேறு பகுதியில் எடுக்கப்பட்ட குட்டியுடன் கூடிய புலி நடமாடும் காட்சிகளை யாரோ தவறாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்' என்றார்.


Next Story