திருச்சி வரும் ரெயில்களின் நேரம் மாற்றம்
மயிலாடுதுறை, தஞ்சாவூரில் இருந்து திருச்சி வரும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் (வண்டி எண்கள்: 16233, 16234) நேரமும், தஞ்சை-திருச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் (வண்டி எண்:06869) நேரமும் நாளை (புதன்கிழமை) முதல் மாற்றப்படுவதாக திருச்சி கோட்ட ரெயில்வேயின் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு வரும் ரெயில் (வண்டி எண்:16233) தினமும் மயிலாடுதுறையில் இருந்து காலை 8.35 மணிக்கு பதிலாக 8.15 மணிக்கு புறப்படும். அதுபோல் அந்த ரெயில் காலை 11.05 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு திருச்சியை வந்தடையும். இதேபோல் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் (வண்டி எண்:16234) தினமும் திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு பதிலாக பிற்பகல் 12.50 மணிக்கு புறப்படும். அதுபோல் மாலை 3.45 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கே மயிலாடுதுறையை சென்றடையும். மேலும், தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு வரும் ரெயில் (வண்டி எண்:06869) தினமும் காலை 6.45 மணிக்கு பதிலாக காலை 6.30 மணிக்கு புறப்படும். அதுபோல் காலை 8.15 மணிக்கு பதிலாக 8 மணிக்கே திருச்சியை வந்தடையும்.