திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசாி சாமிக்கு சிறப்பு பூஜையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. மேலும் பகா சூரனுக்கு அன்னமிடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story