திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

வில்லியநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

வில்லியநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 30-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி, அம்மன் வீதிஉலா, மகாபாரத கதைகள் ஆகியவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காவிரி கரையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து அம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வில்லியநல்லூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story