மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருமருகல் மகா மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
திட்டச்சேரி:
திருமருகல் மகா மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
நாகை மாவட்டம் திருமருகலில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 10 நாட்கள் தொடர்ந்து அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.
தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், மாப்பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.