டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து


டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து
x

நத்தத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல்

நத்தத்தில் இருந்து கட்டிட கழிவுகளை ஏற்றிக்கொண்டு, சமுத்திராப்பட்டி நோக்கி டிப்பர் லாரி ஒன்று நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, காட்டுவேலம்பட்டியை சேர்ந்த ராமு ஓட்டினார். நத்தம் பஸ்நிலையம் அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த கழிவுநீர் ஓடையில் மோதி டிப்பர் லாரி கவிழ்ந்தது. விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் டிரைவர் ராமு காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்து கிடந்த டிப்பர் லாரி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story