நங்கவள்ளி சோமேஸ்வர கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
மேச்சேரி:-
நங்கவள்ளி சவுந்தரவல்லி சமேத சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். நங்கவள்ளி பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புனித நீர் கொண்டு வரப்பட்டது. பஸ் நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து சூரிய நாராயணர் வழிபாடு, கும்பாபிஷேக யாக வேள்விக்கு தேவையான அக்கினியை சூரிய தேவனிடம் இருந்து பெறுதல் ஆகியன நடந்தது. மாலை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. மாலை 6 மணிக்கு முதற்கால யாக வேள்வி பூஜை நடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) 2-ம் காலை யாகபூஜையும், மாலையில் 3-ம் கால யாகபூஜையும் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) 4-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. காலை 6.15 மணிக்கு மேல் 7.15-க்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை, சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம், வீதி உலா நடக்கிறது.