சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் தீர்த்தவாாி


சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் தீர்த்தவாாி
x

பங்குனி உத்திர விழாவையொட்டி சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் தீர்த்தவாாி நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றது. நேற்று பங்குனி உத்திர விழாவையொட்டி வள்ளி தேவ சேனை, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. , இரவு வெள்ளி ரதத்தில் திருவீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ந் தேதி (வியாழக்கிழமை) விக்னேஸ்வர பூஜையும், 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை வள்ளி தேவ சேனா சண்முக பெருமாள் உற்சவ மண்டபம் எழுந்தருளல். 8-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், சண்முக பெருமாள் - வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது. 9, 10-ந் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும், 11-ந் தேதி இரவு திருக்கல்யாணமும், 12-ந் தேதி(புதன்கிழமை) சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகம், அலங்கார தீபாரதனையும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி, மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.


Next Story