திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயபோஸ் வரவேற்று பேசினார். இணை செயலாளரும், தமிழ் துறைத்தலைவருமான கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பகவதிபாண்டியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும், பயின்றோர் கழக உறுப்பினருமான சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயணராஜன், அலுவலர்கள் ராஜன் ஆதித்தன், நடராஜன், தபசுமணி, முருகன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் சி.கவிதா, ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ், ராமஜெயலட்சுமி, ஏ.கவிதா, வாசுகி, மகேசுவரி, ராஜகுமாரி, மோதிலால் தினேஷ், லோக்கிருபாகர் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் ஏற்புரை வழங்கினார். பயின்றோர் கழக மூத்த உறுப்பினர்கள் மரிய சாமுவேல், கணபதி, ஆறுமுகம், அலெக்சாண்டர், ராஜேந்திரன், சங்கர நாராயணன் ஆகியோர் புதிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கட்டுரை, பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


Next Story