திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு திங்கட்கிழமை கடலுக்கு சென்றனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் 2 நாட்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர். இதில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் மீனவ பிரதிநிதிகளை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நேற்று காலையில் 12 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.


Next Story