திருச்செந்தூர் அமலிநகரில் 12-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்


திருச்செந்தூர் அமலிநகரில் 12-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அமலிநகரில் 12-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர் கிராம பகுதியிலுள்ள கடல்பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்ற மீனவர்களின் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் அமலிநகர் மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒராண்டாகியும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அதனால் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க கோரி அமலிநகர் மீனவர்கள் கடந்த 7-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று 12-வது நாளாக கோரிக்கையை வலியுறுத்தி அமலிநகர் ஆலயம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story