திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாணவி பேரவை தலைவர் ஷிவதர்ஷிணி வரவேற்று பேசினார். தூத்துக்குடி காமராஜர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு 'தாயினும் சாலபரிந்து' என்ற தலைப்பில் பேசினார். கல்லூரி பேராசிரியைகள் அனிதாநேசம்மாள், பாப்புலெட்சுமி, மரகதம் மற்றும் 5 மாணவிகள் ஆசிரியர் தின விழா குறித்து பேசினர். முடிவில், ஆசிரியர் கழக செயலாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் காந்திமதி, உமாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story