திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி
திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் சார்பாக தினத்தந்தி பத்திரிக்கை வழங்கி, வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷிபா ஜெனி அமுதா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ஜெகநாத பெருமாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்த ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன் பள்ளி மாணவர்களுக்கு தினத்தந்தி நாளிதழ் வழங்கி வாசிப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இந்து சூடன், வாசிப்பு இயக்க ஆலோசர்கள் இசக்கிமுத்து, செந்தில் அதிபன், பழனி செல்வம், வீரமணி, நல்நூலகர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நல்லூலகர் மாதவன் நன்றி