திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா


திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்   மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:36+05:30)

திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை மாரியம்மாள் தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, கல்யாணமனோகரன், ராஜேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் சிவஆனந்தி கலந்து கொண்டு இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 199 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் சங்கரி நன்றி கூறினார்.


Next Story