திருச்செந்தூர் மேலத்தெரு மாரியம்மன் கோவில் கொடை விழா, சுடலைமாட சுவாமி கோவில் கால் நாட்டு விழா


திருச்செந்தூர் மேலத்தெரு மாரியம்மன் கோவில் கொடை விழா, சுடலைமாட சுவாமி கோவில்  கால் நாட்டு விழா
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 4:50 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் மேலத்தெரு மாரியம்மன் கோவில் கொடை விழா, சுடலைமாட சுவாமி கோவில் கால் நாட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் மேலத்தெரு மாரியம்மன் கோவில் கொடை விழாவும், சுடலைமாட சுவாமி கோவில் கால் நாட்டு விழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் கோவில்

திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் பகலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் கும்பம் வீதி உலா வந்தது. மாலையில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகர் பகுதி சுற்றி கோவிலுக்கு வந்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. பகல் 1 மணியளவில் மஞ்சள் நீராட்டு தீபாராதனையும், அம்மன் கும்பம் ஊரில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நகர் பகுதியில் முளைப்பாரி ஊர்வலமாக வந்து, கடலில் பிரி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சுடலை மாடசுவாமி கோவில

அதேபோல் மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா வருகிற 24-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை 3 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி, நேற்று பகல் 11.45 மணியளவில் மாரியம்மன் கோவிலில் இருந்து திருக்கால் சுடலைமாட சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் சுடலைமாட சுவாமி கோவிலில் திருக்கால் நாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 24-ந் தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக ரதவீதி வழியாக கோவிலுக்கு வருகிறது. பின்னர் சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடக்கிறது.

பின்னர் 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடக்கிறது. அதேபோல் இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடக்கிறது. 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகா சபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story