திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கிப்பணி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு
திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கிப்பணி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கிப்பணி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
வங்கிப்பணி
பொதுத்துறை வங்கிப்பணிகளில் கிளார்க் பதவியில் (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தவிர) சேர வங்கிப்பணி தேர்வாணையம் தேர்வு நடத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளின் 6,035 காலியிடங்களுக்கான கிளார்க் பணிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கான 6,932 பதவிகளுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த 2 தேர்வுகளுக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 27-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கிளார்க் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை எழுதலாம். பொதுப்பிரிவினர் 28 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 31 வயது வரையிலும், எஸ்.சி-எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்பு
எழுத்து தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி மொத்தம் 25 நாட்கள் நேரடியாக நடத்தப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சியின்போது 10 மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
இலவச புத்தகங்கள்
பயிற்சியில் சேருபவர்களுக்கு வங்கி தேர்வுகளில் இடம் பெறும் காமன் சென்ஸ் ரீசனிங், பஸில், நியூமெரிக்கல் எபிலிட்டி, குவான்டிடேட்டிவ் ஆப்ட்டியூடு, ஆங்கில மொழித்திறன், வங்கி பொருளாதாரம், பொது அறிவு, டேட்டா ளஇன்டர்பிரட்டேசன் ஆகிய தலைப்புகளில் 8 இலவச புத்தகங்கள் வழங்கப்படும். இந்த புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில் பயிற்சியின்போது வழங்கப்படும்.
வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும். பயிற்சி கட்டணம் ரூ.6,000 ஆகும். பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 25-ந் தேதி ஆகும்.
தங்கும் விடுதி
பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.
விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7,500-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான வருகிற 27-ந் தேதி நேரில் செலுத்த வேண்டும்.
தொலைபேசி எண்கள்
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி, பெயர், பின்கோடு, முகவரி, தொலைபேசி எண், இமெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு எழுதி, அத்துடன் ரூ.6 ஆயிரத்துக்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய ஏதேனும் ஒரு வங்கி டிராப்ட்) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216' தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பயிற்சி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242998, 9443178481, 9524241303 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.