திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில்   சர்வதேச கடலோர தூய்மை தினம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் தலைமையில் கடலோர போலீசார், கல்லூரி மாணவர்கள் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தரைப்படை, கப்பற்படை மாணவர்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தரைப்படை மாணவர்கள், கோவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடற்கரையில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு, எந்தளவிற்கு நமது கடல்சார் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பது பற்றியும், தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நாயகம், ஆதித்தனார் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story