திருச்செந்தூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க கூட்டம்


திருச்செந்தூர் தாலுகா   மருந்து வணிகர்கள் சங்க கூட்டம்
x

திருச்செந்தூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்செந்தூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தூக்க மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் கையாள்வது பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு மருந்து வணிக வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தாலுகா தலைவர் சரவணப் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட்ராமன், தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் முனுசாமி, செயலாளர் ஜான் பிரிட்டோ, ரீடெய்ல் விங் தலைவர் முத்துகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் இளங்கோ கலந்து கொண்டு மருந்துகளை கையாள்வது பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர், உடன்குடி, ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட ரீடெயில் விங் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story