திருச்செந்துர் கோவில் கடற்கரையில் கடல் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்
திருச்செந்துர் கோவில் கடற்கரையில் கடல் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி சார்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் படி, திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணி அறிவுறுத்தலின்படி, நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் செங்குழி ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில், வீரபாண்டியன்பட்டினம் துளசி பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றினைந்து கோவில் கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் கடல் கழிவுகளை அகற்றும் தூய்மை பணி மேற்கொண்டனர். முன்னதாக திருச்செந்தூரை குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை, நகர துணை செயலாளர் மகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.