திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கும்மிப்பாட்டு பாடி நடனமாடிய பெண்கள்
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கும்மிப்பாட்டு பாடி நடனமாடியவாறு பெண்கள் வள்ளி-முருகன் வரலாற்றை விளக்கினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் வள்ளி-முருகன் திருமணம் குறித்து பெண்கள் கும்மிப்பாட்டு பாடி நடனமாடினர்.
கும்மிப்பாட்டு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்குநாடு கலைக்குழு சார்பில், வள்ளி அம்பாள் வரலாறு மற்றும் வள்ளி-முருகன் திருமணம் குறித்து ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு முருகன் கோவிலில் கும்மிப்பாட்டு பாடியவாறு நடனமாடி வழிபடுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஆசிரியை தமிழச்சி தாரணி தலைமையில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி-முருகன் திருமணம் குறித்து கும்மிப்பாட்டு பாடி நடனமாடி வழிபட்டனர்.
மன அழுத்தம் நீங்கி...
இதில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரையிலான சுமார் 300 பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று கும்மிப்பாட்டு பாடி நடனமாடி வழிபட்டனர். அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிந்து ஒன்றுபோல் கும்மிப்பாட்டு பாடி நடனமாடியதை திரளான பக்தர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
இதுகுறித்து கொங்குநாடு கலைக்குழுவினர் கூறுகையில், ''ெபண்கள் கும்மிப்பாட்டு பாடி நாட்டியமாடுவதால் மன அழுத்தம் நீங்கி, உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்று தன்னம்பிக்கை ஏற்படுகிறது'' என்று தெரிவித்தனர்.