திருச்செந்தூர் கோவிலில் திருடியவர் கைது


திருச்செந்தூர் கோவிலில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரம் அருகில் உண்டியல் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இந்த உண்டியலில் ஒருவர் மெல்லிய கம்பியை உள்ளே நுழைத்து பணத்தை திருடினார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் விரைந்து சென்று, அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, உள்துறை அலுவலகம் மூலமாக கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நெல்லை மேலப்பாளையம் கணேசபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் இளங்கோவன் (வயது 39) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்து 40-ஐ பறிமுதல் செய்தனர்.

---


Next Story