திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில்மாசித் திருவிழா தேரோட்டம்


திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில்மாசித் திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

மாசி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த 13-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவிழா காலங்களில் அம்மன் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 6.15 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து மீண்டும் காலை 7 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

---


Next Story