திருச்செந்தூர் கோவிலுக்கு வேல் குத்தி வந்த பக்தரை தனியார் காவலாளிகள் தள்ளிவிடுவதா?:இந்து முன்னணி கண்டனம்


திருச்செந்தூர் கோவிலுக்கு வேல் குத்தி வந்த பக்தரை தனியார் காவலாளிகள் தள்ளிவிடுவதா?:இந்து முன்னணி கண்டனம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 9:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலுக்கு வேல் குத்தி வந்த பக்தரை தனியார் காவலாளிகள் தள்ளிவிட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விரதமிருந்து வேல் குத்தி வந்த பக்தரை கோவிலில் பணியாற்றும் தனியார் காவலாளிகள் நெஞ்சை பிடித்து தாக்கி தள்ளிவிட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

பக்தர்களுக்குத்தான் கோவிலே தவிர சம்பளத்திற்கு பணியாற்றுபவர்களுக்கு அல்ல. வேல் குத்தி வந்த பக்தரை ரவுடிகள் போல் தாக்கி தள்ளுவது வேதனைக்குரிய செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அராஜக செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இங்கு பணியாற்றும் தனியார் காவலாளிகள் அடிக்கடி இதுபோன்று நடந்து கொள்வதாக பக்தர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, வேல் குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்டு தாக்கிய காவலாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story