திருச்செந்தூர்சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா6-ந் தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா 6-ந் தேதி தொடங்குகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
சந்தனமாரி அம்மன் கோவில்
திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை 6 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் காலையில் கால்கோல் நட்டும் விழா நடந்தது. பின்னர் 6-ந் தேதி இரவு ஜெய விநாயகர்க்கும், சந்தனமாரி அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. அதேபோல் 7-ந் தேதி இரவும் ஜெய விநாயகருக்கும், சந்தணமாரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி தீபாரானை நடக்கிறது.
கொடை விழாவின் முக்கிய நாளான 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து ஜெய விநாயகருக்கும், சந்தனமாரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடக்கிறது. பகல் 1 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு முளைப்பாரி வீதி உலா நடக்கிறது. இரவு 12 மணிக்கு சந்தணமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. கொடை விழா காலங்களில் பக்தர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
மஞ்சள் நீராட்டு
9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது. பின்னர் 12.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கும்பம் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. 10 மற்றும் 11-ந் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாரானை நடக்கிறது.
விழா நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் திரைபட மெல்லிசை கச்சேரி, வில்லிசை, கரகாட்டம், இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.