திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரம்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரத்தை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிற உண்டியல் மாதம் 2 முறை எண்ணப்படுகிறது. இந்த மாதம் (ஜனவரி) உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் நடந்தது. அப்போது திருப்பூரை சேர்ந்த சஷ்டிகா என்ற பக்தர் உபயமாக வழங்கிய 10, 5, 2 மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களை தனித்தனியே பிரிப்பதற்கான எந்திரத்தை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மண்டல உதவி ஆணையர் சங்கர், அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story