திருச்செந்தூர் கடலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு


திருச்செந்தூர்   கடலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கடலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவில் கடலில் தற்கொலைக்கு முயன்ற முதியவரை கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.

முதியவர் தற்கொலை முயற்சி

ஈரோடு மாவட்டம் சிவகிரி பெரியார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (68). மனைவி வளர்மதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சுப்பிரமணியன் வீட்டிலிருந்து கோபித்து கொண்டு நேற்று திருச்செந்தூர் வந்துள்ளார்.

பின்னர் காலை 9 மணியளவில் அவரது கால்களில் பிளாஸ்டிக் கயிற்றினால் கட்டிக்கொண்டு நாழிக்கிணறு எதிர்ப்புறம் உள்ள கடலில் இறங்கி தற்கொலை முயன்றுள்ளார்.

மீட்கப்பட்டார்

சிறிது நேரத்தில் அவர் கடலில் தத்தளித்தார். இதை கவனித்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சிவராஜா, கணபதி, சரவணன், ஆறுமுகநயினார், கார்த்திக், சர்வேஷ்வரன் ஆகியோர் கடலுக்குள் நீந்தி சென்று அவரை பாதுகாப்பாக மீட்டனர். பின்பு அவரது கால்களில் இருந்த பிளாஸ்டிக் கயிரை அகற்றினர். அவரை கோவில் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு போலீசார் அறிவுரை கூறி ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால்அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story