திருச்செந்தூரில்டாஸ்மாக் ஊழியர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருச்செந்தூரில்டாஸ்மாக் ஊழியர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டினர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
தமிழ் நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இது கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் மேற்பார்வையாளர்ளுக்கு ரூ.1100-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.930-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840-ம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, திருச்செந்தூரில் தொ.மு.ச. பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சின்னத்துரை தலைமையில் டாஸ்மாக் பணியாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், டாஸ்மாக் தொ.மு.ச. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story