திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவி சாதனை


திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவி சாதனை
x

பிளஸ்-2 தேர்வில் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர்காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளியில் 204 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி பா.நேத்ரா 598 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர், தமிழ்-99, ஆங்கிலம் -99, இயற்பியல்- 100, வேதியியல்- 100, கணினி அறிவியல்-100, கணிதம்-100 ஆகிய மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

மாணவி சே.ஆ.அஸ்லின் பிரான்சி 592 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ப.செல்வ ஸ்ருதி 589 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி, முதன்மை முதல்வர் செல்வ வைஸ்ணவி, முதல்வர் ஜீனத் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

மேலும் இப்பள்ளியில், இயற்பியலில் 8 மாணவர்களும், வேதியியலில் 9 மாணவர்களும், கணித அறிவியலில் 9 மாணவர்களும், கணிதத்தில் 4 மாணவர்களும், உயிரியலில் 1 மாணவியும், பொருளியலில் 4 மாணவர்களும், வணிகவியலில் 4 மாணவர்களும், கணக்குப்பதிவியலில் 7 மாணவர்களும் வணிகக்கணிதவியலில் 6 மாணவர்களும் மற்றும் கணினியின் பயன்பாடுகளில் 4 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


Next Story