திருச்செந்தூர்கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித மன்ற கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித மன்ற கூட்டம்நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித மன்ற கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். கணிதவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி சுமதியா ராஜலட்சுமி வரவேற்றார். தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) கணிதவியல் துறை உதவி பேராசிரியை குழந்தை தெரஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "கணிதத்தின் சாகசங்கள்" என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் இளங்கலை 2-ம் ஆண்டு மாணவி அஷ்டலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியைகள் தங்கம், உஷா பரமேஸ்வரி, வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் நடந்த பேரவை கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறை 3-ம் ஆண்டு மாணவி புவனேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஜெனிபா சபினா கலந்துகொண்டு "இணைய உலகத்தின் ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளின் முன்னேற்றம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் (பொறுப்பு) அனிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியை உதரகுமாரி செய்திருந்தார். முடிவில் 2-ம் ஆண்டு மாணவி அழகு மகாலட்சுமி நன்றி