திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில்தீர்த்தவாரி நிகழ்ச்சி


திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமிகோவிலில்தீர்த்தவாரி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில்தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 7.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் சண்முவிலா மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. தமிழ் மாதப்பிறப்பை முன்னிட்டு ஏராளமானபக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story