திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது கோவிலில் இருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது.

கொடியேற்றம்

பின்னர் காலை 5.40 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய ஆறுமுகசுரேஷ் வல்லவராயர் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், மேற்பார்வையாளர் கார்த்திகேயன், மணியம் நெல்லையப்பன், கோவில் பணியாளர்கள், நகராட்சி உறுப்பினர் கவுரி கார்த்திகேயன், பழக்கடை திருப்பதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேரோட்டம்

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ் விழாவில் தினமும் காலை, மாலையில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து கோவில் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பத்தாம் திருவிழாவான செப். 1-ந்தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


Next Story