திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கல்யாண திருவிழா

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 6-15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. திருவிழா வருகிற 22-ந்் தேதி வரை நடைபெறுகிறது.

தேரோட்டம்

வருகிற 20-ந்் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மேல் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முன்னதாக அன்று மாலை 6 மணிக்கு தெற்கு மாசி வீதியில் காசி விசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கின்றன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, நெல்லை உதவி ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.



Next Story