இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பிள்ளையார் கோவிலில் இருந்து பெண்கள் சீர் வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் திரவுபதி அம்மன்-அர்சுனனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 22-ந்தேதி காலை தீமிதி திடலில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story