வாள் நெடுங்கண்ணி அம்மனுக்கு திருக்கல்யாணம்


வாள் நெடுங்கண்ணி அம்மனுக்கு திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வாள் நெடுங்கண்ணி அம்மனுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் வசந்த நவராத்திரி திருவிழா கடந்த 21 - ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தான் தோன்றீஸ்வரர், வாள் நெடுங்கன்னி அம்மனும் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. கோவில் குருக்கள் மற்றும் ஊர் மக்கள் சீர்வரிசை எடுத்து மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story