திருக்கார்த்திகை சிறப்பு அபிஷேகம்


திருக்கார்த்திகை சிறப்பு அபிஷேகம்
x

திருக்கார்த்திகை சிறப்பு அபிஷேகம்

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனைகளும் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் கோவிலில் ஆயிரக்கணக்கான அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து சுவாமி வீதி உலாவும் தேரடி முன்பு சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story