திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
உபதலை அரசு பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
நீலகிரி
உபதலை,
உபதலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் இடையே திருக்குறள் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் வகையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி தலைமை தாங்கினார்.
தனியார் கல்லூரி பேராசிரியைகள் மலர்விழி, அமுதா, குணசீலி ஆகியோர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே பேசினர். திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், அழகான கையெழுத்து போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை சந்திரகலா, ஆசிரியர் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story