திருக்குறள் வாழ்வியலாக்க மாநாடு; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
கோவில்பட்டியில் திருக்குறள் வாழ்வியலாக்க மாநாடு நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சவுபாக்கியா திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருக்குறள் வாழ்வியலாக்க மாநாடு நேற்று நடந்தது. கூட்டமைப்பு துணை தலைவர் கருத்தப்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழரசன், ஒருங்கிணைப்பாளர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் மேம்பாட்டு துறை தலைவர் வக்கீல் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலைமாமணி அமல புஷ்பம், திரைப்பட இயக்குனர் சேகர், பொது செயலாளர் ஆதிலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். குரல் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தேசிய நல்லாசிரியர் ராஜாமணி, திருமலை முத்துச்சாமி, ஜெயா ஜனார்த்தனன், முருக சரஸ்வதி, பொன்ராசு பாண்டியன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.