திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா


திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரவை நிறுவன தலைவர் சிவன்ராஜ் தலைமையில் தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திருமலை நாயக்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் ஞான குருநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 55=ஆவது ஆண்டு அன்னதான குருபூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜோதி சோமசுந்தரம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், யூனியன் துணைத் தலைவர் பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story